
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முத்திரை பதிக்கும் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா இன்று (ஏப்.22) கோலாகலமாக நடைபெற்றது
தேரோடும் மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் “ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா” என்ற கோஷங்கள் விண்ணதிர லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் ஏப்.21ல் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது
The hindu times

