
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஏப்ரல் 22-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சூடு பிடிக்கும் தருணத்தில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு தரும் வகையில் புதிய இந்திய அரசியல் கட்சி உதயமாகலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
மலேசிய இந்திய மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த அரசியல் கட்சி இனி எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ம இகாவில் இருந்து பிரிந்து சென்ற சிலாங்கூர் மாநில முன்னாள் இளைஞர் அணி தலைவர் பி. புனிதன் இந்த கட்சியை வழி நடத்தும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
துடிப்புமிக்க இளைஞரான இவரின் பின்னால் ஏராளமான இளைஞர்கள் அணிவகுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சி ஏதுமில்லை.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மலேசிய இந்திய மக்கள் கட்சி தோற்றுவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

