மலேசிய இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை பெரிக்கத்தான் நேஷனல் அரவணைத்தது!

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஏப்ரல் 22-
மலேசிய இந்திர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பெரிக்கத்தான் நேஷனல் இன்று மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை அதிகாரப்பூர்வமாக தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது.

பெரிக்கத்தான் நேஷனல் கவுன்சில் கூட்டத்தில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது ஒரு வரலாறு ஆகும் என்று அதன் தலைவர் பி. புனிதன் தெரிவித்தார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் கட்சி இடம் பெற்றுள்ளன.

இப்போது இந்த கூட்டணியில் புதிய வரவாக மலேசிய இந்தியர் மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது புதிய வரலாறு ஆகும்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்ட டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக புனிதன் தெரிவித்தார்.

நாட்டின் மேம்பாட்டில் இந்திய சமுதாயம் ஒரு போதும் புறக்கணிக்கக் கூடாது.

அந்த வகையில் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக நாங்கள் கடுமையாக போராடுவோம் என்று புனிதன் தெரிவித்தார்.

மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரமணியம் பதவியேற்றுள்ளார்.

துடிப்புமிக்க இளைஞர்கள் இந்த கட்சியில் முக்கிய பதவி வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles