பூமியைப் பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதன் கடப்பாடு!மாலீம் நவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வலியுறுத்து!

காளிதாஸ் சுப்ரமணியம்

கம்பார், ஏப்ரல் 23
பூமி தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று உலகெங்கிலும் உள்ள 192 நாடு மக்களால் கொண்டாடப்படும் வருடாந்திர நிகழ்வாகும்.

இது 1970 களில் அமெரிக்காவில் ஒரு இயக்கமாகத் தொடங்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் பொதுமக்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் விழிப்புணர்வை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மாலிம் நவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் பவானி நேற்று மம்பாங் டி ஆவான் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற பூமி தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாரு தெரிவித்தார்.

இந்த தினத்தில் மாணவ்ர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான ஓவியப் போட்டியை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறு வயதிலிருந்தே சமூகத்தில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வளர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் சமூகம் ஆரோக்கியமான சூழலில் வாழ நிச்சயம் உதவும் என்று பவானி தெரிவித்தார்.

இன்றைய உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றான பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் 2040 ஆம் ஆண்டளவில் உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தியை 60% குறைக்கும் இலக்கை அடைய செயல்பட வேண்டியதன் அவசியத்தை தீர்க்க இந்த ஆண்டு புவி தினத்தின் மைய்யக் கருத்தாக “Planet vs Plastics” எனும் சுழோகம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்

பூமியைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதன் கடப்பாடாகும் என்றார் அவர்.

இதனிடையே கம்பார் மாவட்ட ஊராட்சி மன்றம் 1 ஜூலை 2023 முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களும் நோ பிளாஸ்டிக் பிரச்சாரத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பைகளின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் RM0.20 சென் வசூலிப்பதை பவானி வரவேற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles