
காளிதாஸ் சுப்ரமணியம்
படங்கள்: மா.பவளசெல்வன்
கடந்த 15வது பொதுத் தேர்தலில் உலுசிலாங்கூர் நாடாளுமன்றத்திற்கு பாக்காத்தன் ஹரப்பான் சார்பில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் போட்டியிட்டார்.
அவரை உலுசிலாங்கூர் மக்கள் வெற்றி பெற செய்திருக்க வேண்டும்.
காரணம் இன்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டிய சேவைகளை டாக்டர் சத்திய பிரகாஷ் சிறப்புடன் செய்து வருகிறார்.
தேர்தலில் தோல்வியடைந்தும் மக்களுக்கு இனபாகுபாடின்றி அவர் ஆற்றிவரும் சேவைகள் அலப்பறியது என்று கம்போங் கொஸ்கான் கம்பத்து தலைவர் குமார் ராவ் கூறினார்.
நேற்று உலுசிலாங்கூரில் அமைந்துள்ள கம்போங் கொஸ்கானில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சில் அவர் இவ்வாரு டாக்டர் சத்திய பிரகாஷை பாராட்டினார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இன்று வரையிலும் காண முடிவதில்லை.
ஆனால் டாக்டர் சத்திய தன்னலமின்றி உலுசிலாங்கூர் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார்.
அவரை நாம் அன்று தேர்தலில் வெற்றி பெற செய்திருந்தால் உலுசிலாங்கூரில் பல வளர்ச்சிகளும் நன்மைகளும் கொண்டு வந்திருப்பார் என்பது இன்று அவர் செய்து வரும் சேவைகளிலே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என்றார் குமார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் புவனேஸ்வரன் பச்சைமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு சிறப்பு பரிசுகளும் எடுத்து வழங்கினர்.

