பிரதமரே தவறு செய்தாலும் இந்திய சமுதாய நலன் காக்க துணிந்து நின்று குரல் கொடுப்பேன் பாப்பா ராய்டு சூளுரை

கோல குபு பாரு. ஏப்.23 – இந்தியர் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். பிரதமரே ஆனாலும் இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு சூளுரைத்தார்.

கோல குபு பாரு வட்டாரத்தில் உள்ள இந்து ஆலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல குபு பாரு ஜ.செ.க. கிளையின் செயலாளரும் உலு சிலாங்கூர் நகராண்மை கழக முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ விக்னேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.

கோவிலும் தமிழ்ப் பள்ளிகளும் நமது இரண்டு கண்களை போன்றது. இது நமது இனத்தின் அடையாளங்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள நமது உரிமைகள் ஆகும் இதனை நாம் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
யார் தவறு செய்தாலும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். பிரதமர் ஆனாலும் இந்திய சமுதாய உரிமைக்காக நாம் தொடர்ந்து துணிந்து நின்று குரல் கொடுப்பேன் என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.

Selangor kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles