
கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. நூறு சதவீத வாக்களிப்பு இலக்கை எட்டுவதற்காக தேர்தல் ஆணையமும், அரசு துறைகளும் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6,124 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் 64.81 சதவீதம் வாக்குப் பதிவு ஆகியுள்ளது. அதாவது, 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. இது ஜனநாயகத்தில் ஆர்வம் கொண்டவர்களை கவலையடையச் செய்துள்ளது
The hindu times

