
ஷா ஆலம், ஏப் 23: கோத்தா கெமுனிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரோஜன் வாயு கலன் வெடித்த சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து தனக்கு காலை 10.14 மணிக்கு அழைப்பு கிடைத்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாடுகள் மற்றும் தீயணைப்புப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
bernama

