உணவுப் பொருட்கள் வீணாகாமல் இருக்க, அரிசியை அதிக அளவில் பதுக்கி வைக்க வேண்டாம்!

கோலா சிலாங்கூர், ஏப் 23: உணவுப் பொருட்கள் வீணாகாமல் இருக்க, அரிசியை அதிக அளவில் பதுக்கி வைக்க வேண்டாம் என பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தப் படுகின்றனர்.

நன்கொடை நோக்கங்களுக்காக வைத்திருக்கும் இருப்புக்கள் உடனடியாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

“உங்களிடம் அதிகம் இருந்தால் (அரிசி), தேவைப் படுபவர்களுக்குக் கொடுங்கள்,” என்று அவர் கோலா சிலாங்கூர் நாடளுமன்ற ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles