
செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 23-
நிகழும் சித்திரை மாதம் 10ஆம் நாள் ஆங்கிலம் 23.4.2024 ஆம் தேதி இன்று செவ்வாய் கிழமை பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மகரிஷி அகத்தியரின் நல்லாசியுடன் 17ஆம் ஆண்டு சித்தர் குரு பூசை மிகவும்விமரிசையாக நடைபெற்றது.
காலையில் சிறப்பு பூசைக்கு பின்னர் நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து காணிக்கை செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் என்று ஏற்பாட்டுக்குழு தலைவர் எஸ். பக்தவச்சலம் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான ஸ்டார் மணியம் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த குரு பூசையானது சித்தர்களின் ஆணைப்படி யாகம் வளர்க்கப்பட்டு,சித்தர் நெறியினர் பால் குடம் எடுத்து ,அகவல் ஓதி,சித்தர்களின் நாமம் பாடியும் சிவபுராணம் ஓதப்பட்டு அகத்தியருக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டு அன்னதானத்துடன் இந்த சித்தர் பூசை நிறைவுடைந்தது என்று அவர்கள் கூறினர்.
இன்றைய அகத்தியர் குரு பூஜையில் ஏராளமான சித்தர் நெறியாளர்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்ததாக பக்தவச்சலம் தெரிவித்தார்.
மகேஸ்வர பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு வாழை இலையில் சுவையான உணவும் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குரு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பெரும் ஆனந்தம் அடைந்தனர்.

