இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பத்து பேர் உயிரிழப்பு!

மஞ்சோங்: ஏப்ரல் 23-
அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் பத்து பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது

TLDM ஹெலிகாப்டர் பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு இரு சம்பந்தப்பட்ட இரு ஹெலிகாப்டர்களை உட்படுத்திய பத்து பேர் மரணமடைந்தனர்.

அதில் ஓர் இந்தியரும் அடங்குவார். லெஃப்டனன் சிவசுதன் தஞ்சப்பன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அரச மலேசிய கடற்படையின் நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது. HOM மற்றும் FENNEC ரக ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.

இதனால் இரு ஹெலிகாப்டர்களும் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்பும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles