பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்நாளை அறிவிக்கப்படுகிறார்!

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலகுபு பாரு ஏப்ரல் 23-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படுகிறது.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி மக்கள் சேவை மையத்தில் நாளை இரவு 8.00 மணிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார் என்று தேர்தல் இயக்குநர் இங் ஸி ஹான் கூறினார்.

நாளை நடக்கும் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உட்பட தேசிய முன்னணி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

இரண்டு வார பிரச்சாரத்துக்குப் பின்னர் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது.

இம்முறை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles