
கோலாலம்பூர் ஏப்ரல் 23-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் இந்திய வேட்பாளரை நிறுத்த வேண்டும் என உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய வேட்பாளரை நிறுத்தினால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் ஏற்படும்.
மேலும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவையும் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்.
பெரிக்கத்தான் நேஷனல் இந்திய வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் பெரிய வரவேற்பையும் பெற முடியும்.
பக்கத்தான் ஹராப்பான் இந்திய சமுதாயத்தை புறக்கணித்து இருப்பதால் இந்திய வாக்காளர்களின் ஆதரவை எதிர்க்கட்சிக்கு திரட்டுவோம் என்று அவர் சொன்னார்.
மலேசிய கினி

