கோலகுபு பாரு ஜசெக வேட்பாளராக ஙா கோர் மிங் பத்திரிகை செயலாளர் Pang Sock Tao அறிவிக்கப்பட்டார்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஏப்ரல் 24-
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் பத்திரிகைச் செயலாளர் Pang Sock Tao ( வயது 31) கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்று இன்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

பக்கத்தான் ஹராப்பான் தனது வேட்பாளரை அறிவிக்கும் ஏற்பாட்டை இன்றிரவு கோலகுபு பாரு மக்கள் சேவை மையத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்தது.

இந்த கூட்டத்தில் ஜசெக வேட்பாளராக Pang Sock Tao போட்டியிடுகிறார் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் அறிவிப்பு செய்தார்.

ஜசெக தேசிய தலைவர் டத்தோஶ்ரீ லிம் குவான் எங், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோஶ்ரீ அகமட் மஸ்லான், கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. மே 11 ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும்.

அம்பாங்கை சேர்ந்த இவர் இதற்கு முன்பு ஜசெக UBaH Tv தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.

வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளரோடு தலைவர்கள் அனைவரும் ஜசெகவின் கோல பாரு சட்டமன்றத்தின் தேர்தல் நடவடிக்கை அறையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles