பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் யார்? இன்றிரவு தெரிந்து விடும்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 25-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை நேற்றிரவு பக்கத்தான் ஹராப்பான் அறிவித்தது.

இந்நிலையில் இன்று இரவு 8.00 மணிக்கு பண்டார் உத்தாமா பத்தாங் காலி தேர்தல் நடவடிக்கை மையத்தில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுகிறது.

மிகப்பெரிய அளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் பெர்சத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங், கெராக்கான் கட்சி தலைவர் டத்தோ டோ மினி மற்றும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் பி.புனிதன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles