
கோலாலம்பூர், ஏப் 25 சமீபத்தில் சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் சிகரெட் மற்றும் மது கடத்தல் கும்பல்களை ராயல் மலேசியன் சுங்கத் துறை (ஜேகேடிஎம்) வெற்றிகரமாக முடக்கியது.
மார்ச் 21 அன்று முதல் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரிங்கிட் 21,000 மதிப்புள்ள 4,030 லிட்டர் மதுபானம் கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் பிடிப்பட்டது என மத்திய மண்டல சுங்க உதவி இயக்குநர் ஜெனரல் நோர்லேலா இஸ்மாயில் கூறினார்.

