நைகல் கார்டனர் வீடு, புக்கிட் தாகார் சாலை விவகாரம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டது: டாக்டர் சத்தியபிரகாஷ்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோல குபு பாரு 26-
நைகல் கார்டனர் வீடு, புக்கிட் தாகார் சாலை பிரச்சினையை உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த தோட்டப் பிரச்சினைகள் தொடர்ந்து இழுப்பறியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் நடக்கவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய சமுதாயத்தின் வாக்குகள் பெருவதற்கு பக்காத்தான் ஹரப்பானுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் .

இதன் அடிப்படையில் கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சேர்த்திருப்பதாக டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

அதே வேளையில் நேற்று உலுசிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் அலுவளகத்தில் நடைபெற்ற மாநில உச்சமன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இப்பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கட்சிக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த மாநில சட்டமன்ற தேர்தலின் போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் சார்பில் இந்த விவகாரம் குறித்து வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் நம்பிக்கைத் தெரிவித்தார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles