
கோலாலம்பூர் ஏப்ரல் 26-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை நடக்கும் வேளையில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவ் போட்டியிடுகிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் இவர் தேசிய முன்னணியை பற்றி தாக்கி பேசிய வீடியோக்களை மசீச இளைஞர் அணி தலைவர் லிங் தியான் சூன் இன்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
தேசிய முன்னணியை தாக்கிப் பேசியது போதவில்லையா. மசீசவையும் இவர் மிகக் கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார்.
அந்த வகையில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து மசீச தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே மசீச இளைஞர் அணி தலைவர் லிங் தியான் சூன் பதிவு செய்திருக்கும் இந்த வீடியோக்களை கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசியும் பதிவிட்டுள்ளார்.
மலேசிய கினி

