
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 26-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூடா மற்றும் பிஎஸ்எம் கட்சிகள் போட்டியிடவில்லை என்று இன்று அதிகப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம் மற்றும் மூடா கட்சியின் இடைக்கால தலைவர் அமிரா ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
கோலகுபு பாரு வாக்காளர்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும்.
மேலும் மடானி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்த இந்த தேர்தல் ஒரு களமாக அமைந்திருப்பதாக அவர்கள் கூறினார்.
இந்த இடைத்தேர்தலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இங்குள்ள மக்கள் பிடித்தமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று குறிப்பிட்டனர்.

