சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளி மாணவர்களுக்காக 11 லட்சம் வெள்ளி பேருந்து கட்டணமாக ஒதுக்கப்பட்டுள்ளது!ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 26-
இவ்வாண்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளி மாணவர்களின் பள்ளிப் பேருந்துக் கட்டணமாக சிலாங்கூர் மாநில அரசு 11 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் உறுப்பினர் ராய்டு தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தமிழ்ப் பள்ளிகளிகளைச் சேர்ந்த 324 மாணவர்கள் நேற்று 97,200 வெள்ளி வழங்கப்பட்டது.

“இந்த உதவி பெரும்பாலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

காரணம் அவர்களில் பல பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்கிறார்கள்.

“இந்த உதவி தேர்தலுக்காக வழங்கப்படவில்லை. உண்மையில் ஒவ்வொரு ஆண்டும் எனது ஆட்சிக் குழு உறுப்பினர் கீழ் இந்த மானியத் திட்டம் உள்ளது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles