
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசு சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து இன்று மைபிபிபி கட்சி களம் இறங்கியது.
மைபிபிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டத்தோ இண்ட்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன், சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொண்டனர்.
ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க அம்னோ, ம இகா, மைபிபிபி, ஜசெக, கெஅடிலான், அமானா கட்சிகளும் களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது

