
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ இரமணன் ஆகியோர் இன்று தமது ஆதரவாளர்களுடன் களம் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

