நாளை சிலாங்கூர்- கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தல்! நிவாஸ் – விகேகே ராஜா அணிகள் இடையே கடுமையான போட்டி

செ வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் ஏப்ரல் 27-
96 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஆண்டு கூட்டமும் தேர்தலும் நாளை பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெறுகிறது.

தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள நடிப்புத் தலைவர் நிவாஸ் ராகவன் போட்டியிடுகிறார்.

நிவாஸ் ராகவனை எதிர்த்து நடப்பு துணைத் தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் போட்டியிடுகிறார் .

நிவாஸ் ராகவன் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடும் வேளையில் ராஜசேகரன் அணி சார்பில் பிரபாகரன் போட்டியிடுகிறார்.

உதவித் தலைவர் பதவிக்கு நிவாஸ் அணி சார்பில் டத்தோ சந்திரசேகரனும் ராஜசேகரன் அணி சார்பில் பன்னீர் செல்வமும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணி சார்பில் டத்தின் மகேஸ்வரியும் ராஜசேகரன் அணி சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.

சங்கத்தின் 14 உச்சமன்ற பதவிகளுக்கும் இரு அணிகள் சார்பில் கடும் போட்டி நிலவுகிறது.

நிவாஸ் ராகவன் அணி சார்பில் ராம்குமார், குணராஜ், சண்முக செல்வி,மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி.இராமன், பிரபாகரன் கோவிந்தன், செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்பிரமணியம், கவிமாறன், நாகராஜன், அமுதா முனியாண்டி, ராம்குமார், பெருமாள் இராமன், குளோரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அதேசமயம் ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பாவ்சியா பிபி, டத்தோ டாக்டர் சுகுமாறன், டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ சி.எம். விக்னேஸ்வரன் , டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ் செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர், டோனி கிளிபெர்ட், , மீனாட்சி கல்யாண சுந்தரம், போட்டியிடுகிறார்கள்.

கடந்த பத்து தினங்களாக அணியினரும் உறுப்பினர்களை சந்தித்து வாக்கு வாக்கு வேட்டையாடினர்.

இருதரப்பிலும் திறமையான மற்றும் ஆற்றல் நிறைந்த வேட்பாளர்கள் போட்டியிடுவதால் போட்டி உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

நாளை 6:00 மணிக்கு மேல் வெற்றி பெற போவது யார் என்பது தெரிந்துவிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles