ஹரப்பனுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது! தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது முந்தைய தேர்தல்களில் அம்னோ வேட்பாளர்களுக்கு உதவுவதில் பக்கத்தான் ஹராப்பனின் ஆதரவை BN திருப்பித் தர வேண்டிய நேரம் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தியோமன், பெலங்கை மற்றும் கெமமான் இடைத்தேர்தல்களில் அம்னோ வேட்பாளர்களுக்குப். பி. கே. ஆர், அமானா மற்றும் டிஏபி தங்கள் ஆதரவை வழங்கியதாக அவர் சொன்னார்..

துணைப் பிரதமராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி ஹரப்பன் வேட்பாளர் பாங் சாக் தாவோவுக்கு உதவ BN தனது இயந்திரங்களை அணிதிரட்டும் என்றார்.

“நாங்கள் எங்கள் இயந்திரங்களை PDM (polling district centres) முழுவதும் பயன்படுத்துவோம்.

மேலும் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட வாக்காளர்களை அணுகுவோம்.

இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற எம்சிஏவின் நிலைப்பாட்டிற்கு பதிலளித்த ஜாஹிட் ஹமிடி அரசு வேட்பாளருக்கு உதவ மாநில அளவில் கட்சி தனது இயந்திரங்களை அணிதிரட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“அவர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சுதந்திரம் பெற்றதிலிருந்து அம்னோவும் MCAவும் நண்பர்களாக இருப்பதால் நிலைமை மாறும் என்று நான் நம்புகிறேன், என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles