கோலகுபு பாருவில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது

மா. பவளச்செல்வன்

கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் உள்ளூர் வேட்பாளர் கைரூல் போட்டியிடுகிறார்கள்.

இது தவிர்த்து சுயேட்சை வேட்பாளராக
பெண் தொழில் முனைவர் Nyau Ke Xin மற்றும் Hafizah Zainudin போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

இன்று தொடங்கி வரும் மே 10 ஆம் தேதி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர்.

பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக அம்னோ, ம இகா, கெஅடிலான், அமானா, ஜசெக, மைபிபிபி, ஐபிஎப் கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

அதேபோல் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரை ஆதரித்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், கெராக்கான் தலைவர் டத்தோ டோமினிக் லாவ், கெடா மாநில பாஸ் கட்சி மந்திரிபெசார் சனுசி, மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் பி. புனிதன் உட்பட பலரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles