கோலகுபு பாருவில்மக்கள் பிரதிநிதி இல்லாமல் போனால்அவர்களின் பிரச்சனைகளை டாக்டர் இராமசாமி துணை நிற்பாரா? – டத்தோ இரமணன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 29-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் ஜசெகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி வலியுறுத்தி வருகிறார்.

ஒருவேளை இந்த இடைத் தேர்தலில் சரியான பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க தவறினால் அதற்கான பொறுப்பை உரிமை கட்சியின் தலைவர் பி.ராமசாமி ஏற்பாரா என்று தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணையமைச்சர் டத்தோ இரமணன் கேள்விஎழுப்பி உள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் டாக்டர் இராமசாமி களம் இறங்கியுள்ளார். இவரின் பிரச்சாரம் வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் இவ்வட்டார மக்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணாவிடில் அவரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் ஆட்சி புரியும் தொகுதிகளில் பிரச்சினை எழும்போது, நாங்கள் ஆட்சியில் இல்லை, முறையான மானியமும் எங்களுக்கு கிடைப்பதில்லை என எதிர்க்கட்சியினர் கூறி வருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.

அதேபோல் கோல குபு பாரு மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை நிகழ்ந்தால் டாக்டர் இராமசாமி அங்கு களம் இறங்க வேண்டும், அவர் களமிறங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பாரா என்றார் டத்தோ ரமணன்.

கோல குபு பாரு மக்கள், டாக்டர் இராமசாமியின் பிரச்சாரத்தை புறக்கணிக்க வேண்டும். நடைபெறவிருக்கும் கேகேபி சட்டமன்ற தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles