
உலு சிலாங்கூர் – எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக நடத்தி வரும்
தனிப்பட்டத் தாக்குதல்களைக் கண்டு தாம் ஒருபோதும் கலங்கப்
போவதில்லை என்று கோல குபு இடைத் தேர்தலில் போட்டியிடும்
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான பாங் சோக் தாவ் உறுதிபடக்
கூறினார்.
மக்களுக்கு ஆற்றக்கூடிய சேவையை இலக்காகக் கொண்டு பிரச்சாரம்
செய்வதில் தாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரப்போவதாக அவர்
சொன்னார்.

