
கோலாலம்பூர், மே 1- இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 58 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மலேசியாவுக்கு வந்த 43 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இது 32.5 விழுக்காடு அதிகமாகும்.
சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, புருணை, இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து முதன்மை நாடுகளிலிருந்து இந்த சுற்றுப்பயணிகளை மலேசியா ஈர்த்ததாக சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங கிங் சிம் கூறினார்.
Bernama

