தொழிலாளர்களின் உரிமைகளைக் கோரி டத்தாரான் மெர்டேக்காவில் தொழிலாளர் தின பேரணி

செ.வே. முத்தமிழ்மன்னன்

கோலாலம்பூர்,மே 1-
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,500 தொழிலாளர்கள், தொழிலாளர் தினத்தை ஒட்டி தொழிலாளர்களின் உரிமைகளைக் கோரி இன்று டத்தாரான் மெர்டேக்காவுக்கு அணிவகுத்துச் சென்றனர்.

அவர்கள் மெனாரா மேபேங்கில் இருந்து டத்தாரான் நோக்கி சுமார் 30 நிமிடங்கள் பேரணியாக சென்றனர்.

பேரணிக்கு மலேசிய சோசலிஸ்ட் கட்சி (PSM), பழங்குடி மக்கள் கவலை மையம் (COAC), மகளிர் உதவி அமைப்பு, போர்னியோ கொம்ராட் மற்றும் பல அமைப்புகள் உட்பட 60 அமைப்புகள் ஆதரவு அளித்தன.

1,500 வெள்ளி குறைந்தபட்ச ஊதியத்திற்கு பதிலாக 2,000 ரிங்கிட் ‘வாழ்க்கைச் செலவு’ ஊதியத்தை நடைமுறைப்படுத்த கோரி அவர்கள் வலியுறுத்தினர்.

அனைத்து அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு உரிமை மற்றும் மாற்று ஏற்பாடு செய்யாமல் கட்டாயமாக வெளியேற்றுவதை நிறுத்துமாறு அரசை வலியுறுத்தினர்.

சம உரிமைகளை வழங்கவும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை நிறுத்த கோரி அவர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles