
கோலகுபு பாரு மே1-
கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் ஜசெகவை பழி வாங்கும் முயற்சியில் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி களம் இறங்கி உள்ளார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
அவருக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
அதனால்தான் ஜசெக மற்றும் பக்கத்தான் ஹராப்பானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொள்கிறார்.
ஜசெக மற்றும் பக்கத்தான் ஹராப்பான் மீதுள்ள வெறுப்பால் அவர் பக்கத்தானுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறார் என்று அவர் சொன்னார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தபோது நிருபர்களிடம் கூறுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
மலேசிய கினி

