பொன்விழா கண்ட சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

செமினி , மே 2-
சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் தனது 50 ஆம் ஆண்டு பொன்விழா வை நேற்று மிகவும் விமரிசையாக கொண்டாடியது.

உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும் என்று
இக்கழகத்தின் தலைவர் நிராகர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு கழகம் தொடங்கப்பட்டு தற்போது 50ஆவது நிறைவு விழாவை கொண்டாடுகிறது.

இக்கூட்டுறவுக் கழகத்திற்கு துன் சாமிவேலு தலைவராக இருந்து பல திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

இக்கூட்டுறவு கழகம் செமினியில் வீடமைப்பு திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு அவற்றை உறுப்பினர்களுக்கு விற்பனை செய்துள்ளது வரலாறாகும்.

இக்கூட்டுறவு கழகத்தின் துணைத் தலைவர் ஜெமினி, செயலாளர் விஸ்வநாதன், துணை செயலாளர் சதேஸ் மற்றும் பொருளாளர் சுபாராவ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

உலுலங்காட், கோம்பாக் கூட்டுறவு ஆணையத்தின் உதவி இயக்குநர் அமிரா நமிலா இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார்.

இவ்விழாவில் முக்கிய அங்கமாக கழகத்தின் வெற்றிக்கு சேவையாற்றிய நல்லுள்ளங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles