
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், மே 1-
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கெப்போங் மெட்ரோ பிரிமா ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் 27 வது வருடாந்திர திருவிழா நடைபெற்றது.
திருவிழாவில் Persatuan Kebajikan Revolusi Teguh Infiniti Malayasia 200 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பேருதவி புதிந்தது.
இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களோடு திருக்குறள் புத்தகமும் வழங்கப்பட்டது. மேலும் இன்நிகழ்ச்சியில் மலாய் மாணவர்களுக்கும் மலாய் அகராதியுடன் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வசதி குறைந்த 50 குடும்பத்திற்கு உணவுக் கூடைகளும்?வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு புக்கிட் அமான் குண்டர் கும்பல் பிரிவு அதிகாரி ASP விக்னேஸ், செந்துல் மாவட்ட CID குமரன் கிருஷ்ணன், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இயக்க்திற்கும் இயக்கதின் தலைவர் பார்த்திபனுக்கும் ASP விக்னேஸ் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கல்வி உபகரணங்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களது நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.
இதனிடையே இன்றைய நிகழ்வு சிறப்பாக நடைபெற இடம் வழங்கிய ஆலய நிர்வாகத்திற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு பேருதவியாக இருந்த அலிகான், சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்ட புக்கிட் குண்டர் கும்பல் ஒழிப்பு பிரிவின் ASP விக்னேஸ் மற்றும் செந்தூல் மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் CID குமரன் கிருஷ்ணன். அனைவருக்கும் Pertubuhan Kebajikan Revolusi Teguh Infiniti Malayasia தலைவர் பார்த்திபன் அடக்கப்பச்சி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

