துன்புறுத்தலால் குழந்தை மரணம்- பராமரிப்பாளர் உள்பட நால்வர் கைது

ஜோகூர் பாரு, மே 1- துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒன்பது மாத பெண் குழந்தை இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் மரணமடைந்தது தொடர்பில் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தொன்பது முதல் 42 வயது வரையிலான அந்த நால்வரும் கடந்த வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மாஹிண்டர் சிங் கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்நிய நாட்டவரான ஒன்பது மாதப் பெண் குழந்தை சித்திரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரியிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அக்குழந்தை சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தது. அக்குழந்தையின் மரணத்திற்கு குற்றச் செயல் காரணமாக இருந்திருக்கலாம் என சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles