செராஸ் தோகையடி விநாயகர் ஆலயத்தின் சார்பில்பேறு குறைந்தவர்களுக்கு உணவு கூடைகள் அன்பளிப்பு!

செ.வே.முத்தமிமன்னன்

கோலாலம்பூர் மே 3-
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நாடு தழுவிய அளவில் தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்ற வேளையில் செராஸ் தோகையடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூசைகளுடன் பேறு குறைந்தவர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.

நாட்டில் புகழ்பெற்ற நாடக மேடை இயக்குனர் மற்றும் செராஸ் தோகையடி விநாயகர் ஆலயத்தின் தலைவருமான எஸ்.டி.பாலா தலைமையில் பேறு குறைந்தவர்களுக்கு பேருதவிகள் வழங்கப்பட்டது.

சிவஸ்ரீ சிவராமன் குருக்கள் தலைமையில் 108 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் சிறப்பு பூசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேறு குறைந்தவர்களுடன் செராஸ் வட்டார மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு பூசைக்கு பின்னர் அனைவருக்கும் வாழை இலையில் சுவையான உணவும் பரிமாறப்பட்டது. Jeyaratnam A. Sabaratnam மற்றும் Sivaratnam A. Sabaratnam ஆகியோர் அன்னதான உபயத்தை ஏற்றுக் கொண்டனர்.

பேறு குறைந்தவர்களின் சுமையை குறைக்கும் வகையில் Sky group navin kumar சார்பில் அனைவருக்கும் உணவு கூடைகள் வழங்கப்பட்டது.

இந்த உணவு கூடைகளை அன்பளிப்பு செய்த நவின் குமாருக்கும் அன்னதானம் வழங்கிய ஜெயரத்னம், சிவரத்னம் ஆகியோருக்கு ஆலய நிர்வாகம் சிறப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வேலையில் மறுபுறம் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு செராஸ் தோகையடி விநாயகர் ஆலயம் உதவிகளை வழங்கி கொண்டிருப்பதாக எஸ்டி பாலா தெரிவித்தார்.

தக்க நேரத்தில் எங்களுக்கு உதவி கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles