10 கோடி வெள்ளியை முறையாக பயன்படுத்தினால்அடுத்தாண்டு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது – டத்தோ இரமணன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கெர்லிங் மே 3-
கடந்த காலத்தில் பெரிய தொகை ஆண்டுதோறும் அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஆண்டில் தான் முதன் முறையாக எனது தலைமையில் பத்து கோடி வெள்ளி மித்ரா நிதி பயன்படுத்த பட்டது.

இந்த ஆண்டும் முறையாக 10 கோடி வெள்ளி பயன்படுத்த பட்டால் அடுத்த ஆண்டு இந்தியச் சமுதாயத்துக்கு கூடுதல் நிதியை கோர முடியும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ இரமணன் தெரிவித்தார்.

ஒரு சில தரப்பினர் ஆண்டுதோறும் இந்தியச் சமுதாயத்துக்கு 10 கோடி வெள்ளி மில்லியன் தானா என்று அரசு மீது கால் புணர்ச்சியுடன் பரப்புரை செய்து வருகின்றனர்.

நாம் இந்திய சமுதாய உருமாற்றத்திற்கான அனைத்து நிதியையும் செலவிட்டால் கண்டிப்பாக இனி வரும் காலங்களில் கூடுதல் நிதி கிடைக்கும் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

கெர்லிங்கில் நேற்று பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா, செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles