
மா. பவளச்செல்வன்
கெர்லிங் மே 4-
புரட்சி தலைவர் இயக்கத்தின் தலைவர் சோமநாதன், செயலாளர் ஹரிகிருஷ்ண ராவ் ஆகியோர் தலைமையில் கெர்லிங் தமிழ்ப் பள்ளியில் பயிலும் 40 மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது.
தமிழ் பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பொருட்டு இந்த சீருடைகள் வழங்கப்பட்டதாக புரட்சித்தலைவர் இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணரால் தெரிவித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

