
மா. பவளச்செல்வன்
சுங்கை பட்டாணி, மே 3-
கடாராம் மாநிலத்தில் சுங்கை பட்டாணி யூ.பி. தோட்டத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் சிவ லிங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் மாவீரன் ராஜராஜ சோழனின் சிலையை பார்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். கிருஷ்ணன் பிரமித்து போனார்.
நேற்று ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த போது அவருக்கு இந்த சிலையை காணும் வாய்ப்பு கிட்டியது.
மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கடாராத்தில் மாவீரன் ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்த வரலாற்றை அவருக்கு எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்வில் டத்தின்ஸ்ரீ வாணி, மக்கள் கட்சி கட்சியைச் சேர்ந்த டத்தோ குகனேஸ்வரன், கெடா மாநில மக்கள் சக்தி தலைவர் சண்முகம், கேசவன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.