
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு,மே 4-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து இன்று ஐபிஎப் கட்சி ஏற்பாட்டில் மாபெரும் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.
கோலகுபு பாரு சமூக மண்டபம் வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவ், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு மற்றும் ஐபிஎப் கட்சி தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

