
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 3-
கோப் பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக கூட்டுறவு கழகத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் உதவி மானியம் வழங்கப்படுகிறது என்று துணையமைச் சர் டத்தோ ரமணன் இன்று அறிவித்தார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் வாயிலாக கோப்ரிமாஸ் கூட்டுறவு கழகத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் உதவி மானியம் வழங்கப்படுவதாக கோப்பிரிமாஸ் கூட்டுறவு கழகத்தின் 11ஆவது ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்..
கூட்டுறவு கழகம் என்பது தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதே வேளையில் பொருளாதார மேம்பாட்டிற்கு முதலீட்டாளர்கள்,
பெரிய நிறுவனங்களின் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு இதுவொரு சிறந்த வழியாகும்.
மக்களின் பொருளாதாரம், சமூக தேவைகளை பூர்த்தி செய்வதிலும்
தொடர்ந்து வளர்ச்சியை கொண்டு வருவதில் கூட்டுறவு கழகங்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.
கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 352 இந்திய கூட்டுறவுக் கழகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
இக்கூட்டுறவு கழகங்களில் 255,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
352 இந்திய கூட்டுறவு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 1.75 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
இதன் மொத்த பங்கு மூலதனம் 618.74 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் வரும் ஆண்டுகளில் இந்தியக் கூட்டுறவு கழகங்கள் இன்னும் சிறப்புடன் செயல்படும் பட்சத்தில் சமூக மக்களின் பொருளாதாரமும் மேம்பாடு கானும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று அவர் சொன்னார்.
அதே வேளையில் கோபிரிமாஸ்க்கு மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் கீழ் 1 லட்சம் ரிங்கிட் உதவி மானியம் வழங்கப்படுகிறது.
இம்மானியம் கோபிரிமாஸின் வணிகத்தை விரிவுபடுத்துவதுடன் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.
கோப் பிரிமாஸ் கூட்டுறவு கழகத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம், செயலாளர் சி. கிருஷ்ணன், பொருளாளர் விஜயபெருமாள், துணை செயலாளர் சிவபதசேகரன் துணை பொருளாளர் சின்னையா உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.