
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே4-
பெரிக்காத்தான் நேசனலின் நிலைப்பாடு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது,
அது கொள்கையற்ற சந்தர்ப்பவாதிகளின் கூட்டு, அரசியலில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு பிரச்சனையும் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தவிர ஒரு நிலைபாடு இல்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி சாடினார்.
மாநில பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) தலைவரான அவர், பெரிக்காத்தான் நேசனல் தலைவர்கள் அரசாங்கத்தைத் தாக்குவதற்காக அடிக்கடி மாற்றி பேசுவதிலும் திசை திருப்புவதாக இருக்கின்றனர்.
அவர்களின் வாதங்கள் உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை,
கோலா குபு பாரு மாநில சட்டமன்றத்தின் (டியூஎன்) தேர்தல் பிரச்சாரத்தை (பிஆர்கே) பார்க்கும்போது, எதிர்க்கட்சிகள் வாதம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் கோபத்தைத் தூண்டக்கூடியதாகவும் உள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.