பிரதமரை விமர்சிக்கவில்லை!டத்தோஸ்ரீ சரவணன் விளக்கம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மே 4-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் இன்று திட்டவட்டமாக மறுத்தார்.

கோல குபு பாரு ராசாவில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அந்த மேடையில் நான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களில் 99 சதவீதம் பேர் நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்கள்.

ஜசெக, கெஅடிலான் தலைவர்களும் அங்கு இருந்தனர்.

அவர்கள் முன்னிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை நான் விமர்சித்தேன் என்றால் அதை யாராவது நம்புவார்களா? என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

மஇகாவும், மசீசவுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுக்காததற்காக அதிக கோபம் கொள்ள வேண்டும் என்ற எனது கூற்று நகைச்சுவையாக இருந்தது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles