
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 5-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் இந்தியர்கள் கலக்கம் அடைய தேவையில்லை என்று டத்தோஸ்ரீ எட்மெண்ட் சந்தாரா தெரிவித்தார்.
இந்தியர்களின் நலன்களை நாங்களும் தொடர்ந்து பாதுகாப்போம்.
குறிப்பாக தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து பேணி காப்போம் என்று அவர் சொன்னார்.
இதனிடையே மீரா கட்சி தலைவர் டத்தோ சந்திரகுமணன் கூறுகையில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் கைரூலை வெற்றி பெற செய்யுங்கள் என்று இந்திய வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
பெரிக்கத்தான் நேஷனலுக்கு வாக்களித்தால் சலுகைகள் பறிபோகும் என்று கூறுவது சரியல்ல.
ஆகவே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிக்கத்தான் நேஷனலுக்கு வாக்களிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.