
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 6-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் மே 11 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாக்களிப்பை புறக்கணிக்க சில கட்சிகளின் தூண்டுதலால் உணர்ச்சிகளைப் பின்தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
மஇகா தேசிய முன்னாள் இளைஞரணி துணைத்தலைவர் வி.முகிலன் கூறுகையில் இப்பகுதிக்கு உண்மையிலேயே சிறந்த சேவையை வழங்கக்கூடிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து, வாக்குகளை பயன்படுத்தி இந்திய சமூகம் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜசெக வேட்பாளர் பாங் சாக் தாவேயின் வெற்றி அப்பகுதி வாக்காளர்களுக்கு நன்மைகளை வழங்கும் என்றார்.