
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை திங்கி மே 7-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேரி, மிஞ்ஞாக், சுங்கை திங்கி, நைகல் காடனர், புக்கிட் தாகார் ஆகிய 5 தோட்டங்களை சேர்ந்த 245 தொழிலாளர்களுக்கு தரை வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த 5 தோட்டங்களில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு இந்த வீடமைப்பு திட்டத்தில் கடைகள் வழங்கப்படுமா என்று கேள்விக்கு இந்த வீடமைப்பு திட்டம் வரையும் போது அது பற்றி பேசப் படும்” என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இந்த 5 தோட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வரும் ஆலயங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் நிலைமை குறித்து கேட்டபோது ஆலயங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் தற்போது இருக்கும் இடத்தில் அப்படியே நிலை நிறுத்தப் படும் ” என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.
புதிய வீடமைப்பு திட்டத்தில் மண்டபம் மற்றும் பாலர் பள்ளி கட்டப்படும் என்றார் அவர்.

