
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 7-
நாட்டு மக்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை ஒற்றுமை அரசாங்கத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்று ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து அவர் நேற்று பிரச்சாரம் செய்தார்.
கோல குபு பாருவில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒற்றுமை அரசாங்கத்தால் மட்டுமே மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் தவிர பெரிக்கத்தான் நேஷனல் அல்ல.
இந்த தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் வெற்றி பெற்றாலும் அவரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.
ஆகவே இங்குள்ள மக்களின் பிரச்சனைகள் தீர்க்க, உங்களுக்கு அரசாங்கத்தின் வேட்பாளர் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.
எனவே வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை தேர்வு செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

