பக்கத்தான் வேட்பாளரை ஆதரித்து மஇகா இளைஞர் அணி பிரச்சாரம்!

பக்கத்தான் வேட்பாளரை ஆதரித்து ம இகா இளைஞர் அணி வீடு வீடாக பிரச்சாரம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 8 –
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து ம இகா இளைஞர் அணியினர் நேற்று வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்தனர்.

ம இகா இளைஞர் அணி துணை தலைவர் அண்ட்ரூ தலைமையில் அரவிந்த் கிருஷ்ணன் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் KKB குடிமக்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை தீர்மானிக்க இன்னும் 3 நாட்கள் இருக்கிறது.

பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும்
இளம் வேட்பாளரான சகோதரி பாங் சாக் தாவோவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles