

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 8 –
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள வேளையில் நேற்று மைபிபிபி கட்சியின் பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் உலு சிலாங்கூர் மைபிபிபி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டம் கோலகுபு பாரு ராசாவில் நடைபெற்றது. ராசா வட்டாரத்தை சேர்ந்த 500 வாக்காளர்கள் திரண்டு வந்து முழு ஆதரவு வழங்கினர்.
மைபபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
வாக்களிக்க வேண்டாம் என்று கூறுபவர்களை புறக்கணித்து விட்டு மே 11 ஆம் தேதி வாக்களிக்க திரண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
யாருக்கு வாக்களித்தால் இங்குள்ள மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உணர்ந்து வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவும் இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் மைபிபிபி கட்சிக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சார கூட்டத்தில் மைபிபிபி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் உலு சிலாங்கூர் மைபிபிபி கிளைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்