ஹராப்பான் வேட்பாளரின்தேர்தல் கொள்கை அறிக்கையை அப்படியேகாப்பி அடிப்பதா!பெரிக்கத்தானை சாடினார் துளசி மனோகரன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 8-
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் பக்கத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளார் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் குற்றஞ்சாட்டினார்.

பெரிகத்தான் வேட்பாளர் கைருல் சுயமாக ஒரு தேர்தல் கொள்கை அறிக்கையை தயாரிக்க முடியாத சூழலில் இருக்கிறார் என்று ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து பிரசாரம் செய்தபோது நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

பெரிக்கத்தான் நேஷனல் கட்சி தலைவர்கள் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுத்து இருக்கிறார்களா?

பெரிக்கத்தான் நேஷனல் தலைவர்கள் இதுநாள் வரை நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து வாயை திறந்ததே இல்லை.

தமிழ்ப்பள்ளிகள் குறித்தும் அவர்கள் போராடியதும் இல்லை.

ஆனால் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர்கள் வாக்குகளை பெற இந்தியர்களை நாடி வருகிறார்கள்.

ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் வழங்கி தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை அப்படியே அவர்களும் காப்பி அடித்து உள்ளனர்.

ஆகவே கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இந்தியர்கள் பெரிக்கத்தான் நேஷனலை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles