நாட்டின் முதல் ஸ்மார்ட் மருத்துவமனையாக மாஹ்சா மருத்துவமனை விளங்கும்!

காளிதாஸ் சுப்ரமணியம்

பண்டார் சௌஜானா புத்ரா, மே 9-
நாட்டின் முதல் ஸ்மார்ட் (நவீன) மருத்துவமனையாக மாஹ்சா மருத்துவமனை விளங்கும்.

இம் மருத்துவமனை விரைவில் கோலாகலமாக திறப்பு விழா காணும் என்று மாஹ்சா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் கூறினார்.

தாதியர் கல்லூரியின் வாயிலாக தனது மருத்துவக் கல்விப் பயணத்தை தொடங்கிய மாஹ்சா இன்று பண்டார் சௌஜானா புத்ராவில் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அனைத்துலகப் பள்ளி, கல்லூரி, பல்கல்கலைக்கழகம் என மாஹ்சா கல்வித் துறையில் பீடுநடை போட்டு வருகிறது.
இந்நிலையில் மாஹ்சா தற்போது பிரமாண்டமான முறையில் மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளது.

4 ஏக்கர் நிலத்தில் 6 மாடிகளுடன், 250 உள் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டில்கள் என அனைத்து அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவ சேவைகளுடன் வாரத்தில் 7 நாட்களுக்கு என 24 மணி நேரமும் இந்த மருத்துவமனை செயல்படும் என்று டான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles