வளர்ச்சி அடைந்த சிலாங்கூர் மாநிலத்தில் கோத்தா ராஜாவில் அடிக்கடி வெள்ளப் பிரச்சனைக்கு முதலில் தீர்வு காணுங்கள்

மா. பவளச்செல்வன்

கோலகுபு பாரு மே 9-
நாட்டிலேயே முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலம் என்றால் அது சிலாங்கூர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்த சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக கோத்தா ராஜா தாமான் செந்தோசாவில் வெள்ளப் பிரச்சனை மக்களை வாட்டி வதைக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தைச் பக்கத்தான் ஹராப்பான் 16 ஆண்டுகளாக ஆட்சி புரிகிறது. ஆனால் வெள்ளப் பிரச்சனைக்கு இதுநாள் வரை தீர்வு காணப்படவில்லை.

கடந்த 2021 இல் ஷா ஆலம் ஸ்ரீ மூடாவில் ஏறிய வெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது.

சிலாங்கூர் மாநில அரசு ஏன் இதுவரை இந்த வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருக்கிறது என்று உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செகு சேகர் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles